Tamil Movies : குசேலன் முதல் ஜிகர்தண்டா வரை.. இன்று வெளியான தமிழ் படங்கள்!
2003 ஆம் ஆண்டு பிரிந்த சாரதி இயக்கத்தில் ஜீவா நடித்து வெளிவந்த படம் தித்திக்குதே. இப்படம் வெளியாகி இன்றுடன் 21 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
ஜீவா மற்றும் ஸ்ரீ தேவி இருவரும் சிறுவயதில் நண்பர்களாக இருக்கின்றனர். எதிர்பாராத விதமாக இருவரும் பிரிந்து விடுகின்றனர். ஸ்ரீ தேவி கொடுத்த ஒரு கடிகாரத்தை ஜீவா வைத்து கொண்டு ஸ்ரீ தேவியை நினைத்து கொண்டே வாழ்கிறார். கடைசில் இருவரும் எப்படி சேர்கின்றனர் என்பதே படத்தின் கதை.
2003 ஆம் ஆண்டு கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்த படம் காக்க காக்க. இப்படம் வெளியாகி இன்றுடன் 21 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
சூர்யா கொலை, கொள்ளை செய்யும் ரவுடிகளை என்கவுண்டர் செய்யும் சிறப்பு போலீசாக வருகிறார். அப்போது சூர்யா வில்லனின் அண்ணனை கொன்றுவிட வில்லன் சூர்யாவின் காதலியான ஜோதிகாவை கடத்தி சென்றுவிடுகிறார். அதன் பிறகு எப்படி ஹீரோயினை சூர்யா காப்பாற்றினார் என்பதே மீத கதை.
2008 ஆம் ஆண்டு பி வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த படம் குசேலன். இப்படம் வெளியாகி இன்றுடன் 16 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
பசுபதி சலூன் வைத்திருக்கும் ஊரில் ரஜினி படம் ஷூட்டிங் நடக்கிறது. பசுபதியின் வாழ்க்கை ரஜினியால் எப்படி மாறிக்கொண்டே இருக்கிறது என்பதே குசேலன் படத்தின் கதை.
சித்தார்த் கேங்ஸ்டர் படம் எடுப்பதற்காக ரவுடிகளை பற்றி ஆராய்ச்சி செய்கிறார். மதுரையில் பெரிய ரவுடிகளை இருக்கும் பாபி சிம்ஹாவை பற்றி தெரிந்து கொண்டு, அவரை பின் தொடர்ந்து கதை எழுதி வருகிறார். எதிர்பாராத விதமாக சித்தார்த் பாபி சிம்ஹாவிடம் மாட்டிக்கொள்கிறார். அதன் பிறகு எப்படி அவர் நினைத்த படத்தை எடுக்கிறார் என்பதே மீத கதை.
2014 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சித்தார்த் நடித்து வெளிவந்த படம் ஜிகர்தண்டா. இப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.