Tamil Cinema : தமிழ் படங்களில் நடித்த பிற மொழி நடிகர்கர்கள்
ஃபஹத் ஃபாசில் வேலைக்காரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன் போன்ற தமிழ் படங்களில் தொடர்ச்சியாக நடித்து அவருக்கான அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.
துல்கர் சல்மான் வாயை மூடி பேசவும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு ஓ காதல் கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற நேரடி தமிழ் படங்களில் நடித்து இருந்தார்.
நிவின் பாலி நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு ரிச்சி என்ற படத்தில் நடித்து இருந்தார். தற்போது ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படத்தில் நடித்து வருகிறார்.
சிவராஜ்குமார் ஜெயிலர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு தனுஷுடன் இணைந்து கேப்டன் மில்லர் படத்திலும் நடித்து இருந்தார்.
ராமச்சந்திர ராஜு சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு கோடியில் ஒருவன், யானை, ஹிட் லிஸ்ட் , அரண்மனை 4 என பல தமிழ் படங்களில் நடித்து இருந்தார்.
ஜாக்கி ஷெராப் ஆரண்ய காண்டம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு மாயவன், பிகில், ஜெயிலர் போன்ற படங்களில் நடித்து இருந்தார்.