Unreleased Tamil films : ஷூட்டிங் முடிந்தும் வருட கணக்கில் வெளியாகமல் இருக்கும் தமிழ் படங்கள்!
இடம் பொருள் ஏவல் என்ற படத்தில் விஜய் சேதுபதியும், விஷ்ணு விஷாலும் நடித்திருந்தனர். இந்த படத்தை சீனு ராமசாமி இயக்கினார். வெவ்வேறு ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்று வரையிலும் படம் வெளியாகாமல் உள்ளது.
சுந்தர் சி - விஷால் கூட்டணி முதல் முறையாக மத கஜ ராஜா படம் மூலம் இணைந்தது. இந்த படம் எடுத்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இருப்பினும், படம் இன்று வரைக்கும் வெளியாகவில்லை. தயாரிப்பாளர்களின் இடையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக படம் கிடப்பில் போடப்பட்டது.
கலையரசன், கயல் ஆனந்தி, ஆஷ்னா சவேரி, காளி வெங்கட் ஆகியோர் நடித்திருந்த படம் டைட்டானிக். இந்த படத்தை ஜானகிராமன் இயக்கி இருந்தார். படம் எடுத்து பலவருடங்கள் ஆகியும் இன்று வரைக்கும் வெளியாகவில்லை.
துருவ நட்சத்திரம் படத்தின் மூலம் முதன் முறையாக கெளதம் வாசுதேவ் மேனனும் விக்ரமும் இணைந்தனர். படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் வெளியாகி எதிர்பார்ப்பை தூண்டியது. ஆனாலும் படம் இன்று வரை வெளியாகாமல் இருக்கிறது.
ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்து முடித்த படம் சர்வர் சுந்தரம். படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்ட போதிலும், இன்று வரையிலும் வெளியாகாமல் இருக்கிறது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.