Cinema News : யோகி பாபு நடிப்பில் மற்றொரு படம்.. இன்றைய சினிமா அப்டேட்ஸ்!
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி இன்று பல படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் யோகி பாபு. தற்போது யோகிபாபு ஹீரோவாக நடித்துள்ள படம் வானவன். இந்த படத்தை சுஜின் கே சுந்தரன் இயக்கியுள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த படத்தில் ஆர் ஜே ரமேஷ், லட்சுமி பிரியா, காளி வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர். மிக தீவிரமாக நடந்த படப்பிடிப்பு இன்று நிறைவடைந்துள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது.
தனுஷின் 50- வது படமான ராயனை அவரே நடித்து, இயக்கியுள்ளார். இந்த படத்தில் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிசன், எஸ் ஜே சூர்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏ ஆர் ரஹ்மான் இசையில் முதல் பாடலான அடங்காத அசுரன் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது படத்தின் செகண்ட் சிங்கள் வருகின்ற மே 24 ஆம் தேதி வெளியாக உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவின் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களுள் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸும் ஒன்று. சுல்தான், என் ஜி கே, கைதி, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற பல ஹிட் படங்களை தயாரித்துள்ளது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்ற அறிவிப்பு வந்துள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -