Garudan Trailer Review : நடிப்பில் மிரட்டும் சூரி..கருடன் பட ட்ரெய்லரின் குட்டி விமர்சனம் இங்கே!
இயக்குநர் வெற்றிமாறன் கதையில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் நடித்த கருடன் படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இந்த படத்தை ஆர்.எஸ்.துரை செந்தில் குமார் இயக்கியுள்ளார்.
கருடன் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சூரி. விடுதலை படத்தை போலவே இந்த படத்திலும் இவர் கதாபாத்திரம் பெரிதளவு பேசப்பட்ட வாய்ப்புள்ளது.
சசிகுமாரும் உன்னி முகுந்தனும் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு இடையில் சில பிரச்சினை ஏற்படுகிறது. அந்த பிரச்சினை சூரியை நோக்கி வந்து எப்படி முடிகிறது என்பதை கருடனின் கதை.
படத்தில் சூரி சொக்கன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவன் பேரு சொக்கன்... முரட்டு விசுவாசி என்ற வசனத்திலேயே சூரியின் கதாபாத்திரத்தை விளக்கியுள்ளனர்.
ட்ரெய்லரில் சூரி கத்துவது, சாமியாடுவது போன்ற காட்சிகள் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. ஆக்ஷன், ரொமான்ஸ், எமோஷனல் காட்சி அனைத்தும் கலந்த கலவையாக இப்படம் இருக்கும் என்பது தெரிகிறது.
சூரியின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ள கருடன் படம், வருகின்ற மே 31 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.