Cinema Update : தக் லைஃப் முதல் ராயன் வரை.. இன்று வெளியான சினிமா அப்டேட்கள்!
ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் மணிரத்தினம்- கமல்ஹாசன் கூட்டணியில் 36 வருடத்திற்கு பிறகு உருவாகி வரும் படம் தக் லைஃப்.
சிம்பு, திரிஷா கிருஷ்ணன், ஜோஜு ஜார்ஜ், கெளதம் கார்த்திக், அபிராமி ஆகியோர் நடித்து வரும் தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கர்ணன் படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ், துருவ் விக்ரமை வைத்து படம் இயக்குவதாக இருந்தது. அப்போது உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் படத்தில் பிசியானார் மாரி. பின் மீண்டும் துருவ் விக்ரம் படத்தை இயக்குவதில் மும்முரம் காட்டினார்.
தற்போது, அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும், மாரி செல்வராஜ் படமான பைசன் காளமாடன் படத்தின் பூஜை போட்டோக்களுடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது
தமிழ் சினிமாவில் பிஸியாக நடித்து வரும் முன்னணி நடிகர் தனுஷ். நடிகர் தனுஷின் 50-வது படமான ராயன் படத்தை அவரே எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், மே 9 ஆம் தேதி ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என்றும் வரும் ஜூன் மாதம் படம் வெளியாகும் என்ற அறிவிப்பு தற்போது வந்துள்ளது