Tamil Cinema : தமிழ் சினிமாவில் இன்று வெளியான மனதை வருடும் படங்கள்!
சிவாஜி கணேசன், பத்மினி, மனோரமா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான தில்லானா மோகனாம்பாள் படம் வெளியாகி 56 ஆண்டுகள் நிறைவடைகிறது. கலைஞர்களுக்கு இடையே மலரும் காதல் கைக்கூடியதா என்பதே படத்தின் கதை.
கமல்ஹாசன், அம்பிகா, ராதா ரவி, வி கே ராமசாமி உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த உயர்ந்த உள்ளம் படம் 39 ஆண்டுகள் நிறைவடைகிறது. போகும் போக்கில் வாழும் கதாநாயகனின் வாழ்க்கையை கதாநாயகி மாற்றுவதே படத்தின் சிறப்பு.
எஸ் பி பாலசுப்பிரமணியம், ரமேஷ் அரவிந்த், அஞ்சு, ராதிகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான கேளடி கண்மனி வெளியாகி 24 ஆண்டுகள் ஆகிறது. இந்த படத்தில் இடம்பெற்ற கற்பூர் பொம்மை ஒன்று, மண்ணில் இந்த காதல் உள்ளிட்ட பாடல்கள் செம ஹிட்டானது.
சுந்தர் சி, கோபிகா, விவேக், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான வீராப்பு படம் வெளியாகி 17 ஆண்டுகள் ஆகிறது.
விஜய் சேதுபதி, சாயிஷா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ஜூங்கா படம் வெளியாகி 6 ஆண்டுகள் ஆகிறது. குடும்ப சொத்தை மீட்க ஹீரோ என்ன செய்கிறார் என்பதே கதை.