Tamannaah Bhatia : கனவு நினைவாகி 9 வருடங்கள் ஆகிவிட்டது.. பாகுபலி படத்தை பற்றி தமன்னா நெகிழ்ச்சி!
ரவி கிருஷ்ணன், இலியானாவுடன் இணைந்து கேடி படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தமன்னா
வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், அயன், கண்டேன் காதலை, பையா, சுறா, தில்லாலங்கடி, சிறுத்தை, கோ, வேங்கை, வீரம் போன்ற படங்களில் நடித்து இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தார்.
இந்நிலையில், 9 ஆண்டுகளை நிறைவு செய்த பாகுபலி படத்தின் முதல் பாகத்தை பற்றி நெகிழ்ச்சியாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
“இயக்குநர் ராஜமெளலியுடன் இணைந்து பணியாற்றுவது கனவாக இருந்தது. அது 9 வருடங்களுக்கு முன்பு நிஜமாக மாறியது. ” - தமன்னா
“அற்புதமான படக்குழுவுடன் பணியாற்றியது மனதிற்கு நிறைவாக இருந்தது. அத்துடன் இங்கு நான் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்.” - தமன்னா
“இந்த பிரம்மாண்ட படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த தருணத்தை எப்போதும் மனதில் கொள்வேன். ” - தமன்னா
படத்தை பார்த்து அன்பை பரிமாறிய ரசிகர்களுக்கு அப்போதும் இப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். - தமன்னா