✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

அஜித் போன்று கார் ரேஸில் மாஸ் காட்டும் பிரபல நடிகரின் மனைவி: யார் அந்த பிரபலம் தெரியுமா?

மணிகண்டன்   |  17 Mar 2025 11:17 PM (IST)
1

அல்டிமேட் ஸ்டார் அஜித் கார் மற்றும் பைக் ரேஸ் மீது அதீத காதல் கொண்டவர். தனது படங்களிலும் பைக் மற்றும் கார் ரேஸ் காட்சி என்றால் மனுஷன் மிரட்டி விட்டுடுவார். ரசிகர்கள் அவரின் கார் மற்றும் பைக் ரேஸ் காட்சிகளை அதிகம் ரசிப்பார்கள் என்பதால், இயக்குனர்களும் இதுபோன்ற காட்சியை படங்களில் இடம்பெற செய்கிறார்கள்.

2

விடாமுயற்சி படத்தில் கூட, மிகவும் டேஞ்சரான கார் ஸ்டண்ட் ஒன்றை செய்திருப்பார். ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறாத நிலையில், அஜித் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் தான் குட் பேட் அக்லீ. ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படமும் பக்கா ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது.

3

வரும் ஏப்ரல் 10ஆம் தேதி குட் பேட் அக்லீ படம் வெளியாக இருக்கிறது. சினிமா ஒரு பக்கம் இருந்தாலும் அஜித் இப்போது கார் ரேஸ் பயிற்சியில் பிசியாக இருக்கிறார். ஏற்கனவே 9 மாதங்களுக்கு சினிமாவிலிருந்து ஒதுங்கியிருப்பதாக அறிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

4

இந்த நிலையில் தான் அஜித்தை போன்று பிரபல நடிகை ஒருவர் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

5

அந்த நடிகை வேறு யாருமில்லை. பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து பிரபலமான சோபிதா துலிபாலா தான். சமீபத்தில் கூட தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட இவர், திருமணத்திற்கு பிறகு இப்போது இருவரும் ஹனிமூனுக்கு சென்றுள்ளனர். அதுவும் மெக்ஸிக்கோவிற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

6

பொதுவாக ஹனிமூனுக்கு சென்றால் காதல் மற்றும் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். ஆனால், இந்த ஜோடி சாகசத்தில் ஈடுபட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா இருவரும் கார் ரேஸ் பயிற்சி, சண்டை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

7

இதைப் பார்க்கும் போது படத்தில் ஏதேனும் கார் ரேஸ் காட்சியில் நடிக்க இருகிறாரா அல்லது கார் ரேஸ் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளதா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. எது எப்படியோ சோபிதா துலிபாலா தன்னால் சிறப்பாக ரேஸ் கார் ஓட்ட முடியும் என்பதை இதன் மூலம் நிரூபித்துள்ளார்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • அஜித் போன்று கார் ரேஸில் மாஸ் காட்டும் பிரபல நடிகரின் மனைவி: யார் அந்த பிரபலம் தெரியுமா?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.