Suriya Jyothika : மீண்டும் தொடங்கியது ஜில்லுனு ஒரு காதல்..மும்பை செல்லும் சூர்யா ஜோதிகா!
திரை உலகில் சிறந்த தம்பதி என்று சொன்னதும் நம் நினைவுக்கு வருவது சூர்யா ஜோதிகாதான். இவர்களின் திருமணம் , இரு வீட்டாரின் சம்மதத்துடன் 2005 ஆம் ஆண்டில் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.
திருமணமாகி 16 வருடங்களான நிலையில் , இரண்டு குழந்தைகளுடன் அன்பான குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.
1999 ஆம் ஆண்டு வெளியான பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படம் மூலமாக முதன் முதலில் சந்தித்த இருவரின் நட்பு காதலாக மலர்ந்தது.
சிறந்த காதலர்களாகவும் சிறந்த தம்பதிகளாகவும் இருந்தவர்கள் இப்பொழுது சிறந்த பெற்றோராகவும் உள்ளார்கள்.
மகள் திவ்யா மற்றும் மகன் தேவின் மேற்படிப்பிற்காக சூர்யாவும் ஜோதிகாவும் மும்பை செல்லப்போவதாக தகவல் பரவிவருகின்றது.
ஹிந்தி படம் ஒன்றில் கமிட்டாகியுள்ள ஜோ, அவர் குடும்பத்தோடு இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.
அவர்கள் குடும்பத்தோடு மும்பையில் தங்குவதற்கு 68 கோடி மதிப்புள்ள ஒரு தனி வீட்டின் ஏற்பாடுகள் நடந்து வருகின்றது என்ற தகவல் பரவிவருகிறது.