14 years of Singam : துரைசிங்கம் என்ட்ரி கொடுத்து 14 வருஷமாச்சு!
லாவண்யா யுவராஜ் | 28 May 2024 02:54 PM (IST)
1
ஹரி இயக்கத்தில் நடிகர் சூர்யா போலீஸ் அதிகாரி துரைசிங்கமாக நடித்த படம் 'சிங்கம்'.
2
2010 ஆம் ஆண்டு இதே நாளில் வெளியான சிங்கம் திரைப்படம் இன்றுடன் 14 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
3
நடிகர் சூர்யா ஜோடியாக அனுஷ்கா ஷெட்டி நடித்திருந்தார்.
4
ராதா ரவி, சுமித்ரா, பிரகாஷ்ராஜ், நாசர், விவேக், நிழல்கள் ரவி உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருந்தனர்.
5
இப்படம் சூர்யா நடிப்பில் வெளியான 25வது திரைப்படம்.
6
தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன.
7
படம் முழுக்க எக்கச்சக்கமான அனல் தெறிக்கும் பஞ்ச் வசனங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.