Rajinikanth : மொய்தீன் பாயின் ஷூட் முடிந்தது..கேக் வெட்டி கொண்டாடிய லால் சலாம் படக்குழு!

லால்சலாம் படப்பிடிப்பு நிறைவடைந்தது
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் என்ற படத்தை தற்போது இயக்கி வருகிறார்.
வஇது கிரிக்கெட் சம்மந்தப்பட்ட படம் என்பதால், விஷ்ணு விஷால், மற்றும் விக்ராந்த் ஆகிய கிரிக்கெட் தெரிந்த நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தில் பல்லாயிர கணக்கானோர் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக நடித்து வருகின்றனர்
இந்த படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வந்தார். தற்போது ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய காட்சிகளின் ஷூட் இன்றுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில் விஷ்ணு விஷால், “என்னை நிறைய பேர் வளரவிடாமல் தடுக்க நினைகிறார்கள், ஆனால் நான் அதையெல்லாம் பொருட்படுத்த மாட்டேன் என்னுடைய பயணம் இன்னும் மிக சிறப்பாக இருக்கும் என்றும் ரஜினியுடன் நடிப்பதில் நான் பெருமை கொள்கிறேன்.” என ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.
இந்த படத்தில் கபில்தேவ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.