Thalapathy 70 : விஜய்யின் 70 ஆவது படத்தை இயக்கும் ஷங்கர்..மீண்டும் இணையுமா நண்பன் கூட்டணி?
நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் சமீபத்தில் நடித்து முடித்திருந்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅதற்கு அடுத்ததாக விஜய்யின் 68ஆவது படத்தை வெங்கட் பிரபு இயக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.
இதற்கிடையே விஜய் சில அரசியல் தொடர்பான செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் விஜய், தனது 70ஆவது படத்தில் இயக்குநர் ஷங்கருடன் இணைகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படம் ஒரு அரசியல் த்ரில்லராக இருக்கும் என்றும் இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் படப்பிடிப்பு முடிந்த பிறகு இந்த தகவல் குறித்த அதிகாரப்புர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஷங்கர் விஜய்யிடம் ஒரு வரியில் கதை சொல்லியிருப்பதாகவும் 2024ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ஷங்கர் இப்படத்திற்கான ஸ்க்ரிப்டை எழுத தொடங்குவார் என்ற தகவலும் பரவி வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -