Paayum Puli Bike : பாயும் புலி பைக்கில் கெத்தாக போஸ் கொடுக்கும் ரஜினிகாந்த்!
1983ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம் 'பாயும் புலி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appரஜினிகாந்த் ஜோடியாக ராதா நடித்த அப்படம் ஏவிஎம் நிறுவனத்தின் 126 வது தயாரிப்பு.
பஞ்சு அருணாசலம் திரைக்கதை எழுத அதை எஸ் பி முத்துராமன் இயக்கி இருந்தார்.
சக்கை போடு போட்ட அப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் பயன்படுத்திய சுசுகி பைக்கை ஏவிஎம் நிறுவனம் 40 ஆண்டுகளாக பராமரித்து வருகிறது.
ஏவிஎம் நிறுவனம் தற்போது நடத்தி வரும் கண்காட்சியில் இந்த சுசுகி பைக் மக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அந்த பைக்கில் அமர்ந்து ஸ்டைலாக போஸ் கொடுத்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
காலத்தால் அழியாத இந்த பொக்கிஷத்தை காண கண்காட்சி வாருங்கள் என ரசிகர்களுக்கு சோசியல் மீடியா மூலம் அழைப்பு விடுத்துள்ளது ஏவிஎம் நிறுவனம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -