MK Stalin Birthday : தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள்!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, “தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன்” என அவரது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App“தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன் மக்கள் பணி தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” - பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை
நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முதல்வர் ஸ்டாலினை வாழ்த்தி உள்ளார்.
“மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு என் இனிய பிறந் நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” - நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்
“சமூகநீதி, மகளிர் மேம்பாடு, இளைஞர் நலம், தொழில் வளர்ச்சி என தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்தி வரும் எனது அன்பிற்கினிய நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர், திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் நீடூழி வாழ அவரது பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்” - நடிகர் மற்றும் மநீம கட்சித்தலைவர்
“தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன்” - காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுனா கார்கே
- - - - - - - - - Advertisement - - - - - - - - -