✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

தமிழ் புத்தாண்டில் வெளியாகி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த சூப்பர் ஹிட் தமிழ் திரைப்படங்கள்!

ABP NADU   |  14 Apr 2023 03:25 PM (IST)
1

அபூர்வ சகோதரர்கள் - 1989 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி கமல் ஹாசன் நடிப்பில் வெளியான படம் அபூர்வ சகோதரர்கள். இப்படத்தை சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கியிருந்தார். இந்த படத்தைற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தில் கமலுடன் கௌதமி, நாகேஷ், ஸ்ரீவித்யா, ஜனகராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்த இந்த படம் கமலுக்கு சிறந்த வெற்றி படமாக அமைந்தது.

2

கேப்டன் பிரபாகரன் - கே.ஆர்.செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் 1991 ஆம் ஆண்டு வெளியான படம் கேப்டன் பிரபாகரன். இந்த படம் விஜயகாந்த்-இன் 100 ஆவது திரைப்படம் ஆகும். ஆக்‌ஷன் படமான இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், சரத் குமார், மன்சூர் அலி கான் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் விஜயகாந்தின் திரை வாழ்கையில் முக்கியமான படம் என்றே சொல்லலாம்.

3

அலைபாயுதே - 2000 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் மாதவன் மற்றும் ஷாலினி நடிப்பில் உருவான படம் அலைபாயுதே. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

4

சச்சின் - 2005 ஆம் ஆண்டு ஜான் மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய், ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ ப்ரசாத் இசையமைத்திருந்தார். விஜய்யின் சுட்டித்தனமான நடிப்பும் ஜெனிலியாவின் க்யூட்னஸும் படத்திற்கு கூடுதல் அழகை சேர்த்திருந்தது.

5

சந்திரமுகி - 2005 ஆம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், பிரபு, வடிவேலு, ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் வெளியான த்ரில்லர் படம் சந்திரமுகி. கலக்கலப்பும் த்ரில்லரும் கலந்த இப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

6

தெறி - 2016 ஆம் ஆண்டு அட்லி இயக்கி விஜய், சமந்தா, எமி ஜாக்சன், பிரபு, ராதிகா சரத்குமார், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் தெறி. இந்த படம் வெற்றி படமாக விஜய் ரசிகர்களுக்கு நல்ல ட்ரீட்டாக அமைந்தது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • தமிழ் புத்தாண்டில் வெளியாகி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த சூப்பர் ஹிட் தமிழ் திரைப்படங்கள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.