Rudhran Movie Review : சென்டிமென்ட், காதல், காமெடியென அனைத்திலும் கலந்துகட்டிய லாரன்ஸ்...ருத்ரனை தியேட்டரில் பார்க்கலாமா?
பொல்லாதவன், ஆடுகளம், நய்யாண்டி, ஜிகர்தண்டா, டைரி உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம் “ருத்ரன்”.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த படத்தில் ஹீரோவாக ராகவா லாரன்ஸூம், ஹீரோயினாக பிரியா பவானி ஷங்கரும் நடித்துள்ளனர். மேலும் சரத்குமார், பூர்ணிமா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.
நாசர் - பூர்ணிமா தம்பதியரின் மகன் ராகவா லாரன்ஸ், ஹீரோயினான பிரியா பவானி மீது காதல் கொள்கிறார். நாசர் இறந்தவுடன், திருமணம் முடிந்த கையோடு ராகவா- பிபிஎஸ் அமெரிக்கா செல்கின்றனர். பின், பூர்ணிமாவின் மறைவுக்கு ஊர் திரும்புகின்றனர். அப்போது பிபிஎஸ் காணாமல் போகிறார். இவை அனைத்துக்கும் பின்னணியில் சரத்குமார் இருப்பது தெரிய வருகிறது. இருவருக்குமிடையே என்ன பிரச்சினை, காணாமல் போன பிரியா பவானி ஷங்கர் கிடைத்தாரா என்பதை சென்டிமென்ட், காதல், காமெடி கலந்து பிளாஷ்பேக் காட்சிகளுடன் சொல்ல முயற்சி செய்து இருக்கிறார்கள்.
காஞ்சனா 3 படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பின் ராகவா லாரன்ஸ் படம் வெளியாகியுள்ளது. ஸ்க்ரீனில் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக தெரிகிறார். ஆனால் அவரின் வசன உச்சரிப்பு காஞ்சனா படத்தை நியாபகப் படுத்துகிறது. நடனத்தில் அவரை மிஞ்ச முடியாது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்.
ஹீரோயின் ஆக வரும் பிரியா பவானி சங்கருக்கு பெரிய அளவில் வேலை இல்லை என்றாலும், இரண்டாம் பாதியில் கதை நகர்வதற்கு முக்கியமாக காரணமாக இருக்கிறார். ராகவா லாரன்ஸுக்கு பொருத்தமான ஜோடியாகவும் திகழ்கிறார்.
வில்லன்கள் கொடூரமாக கொல்லப்படுவது கதைப்படி நியாயப்படுத்தப்பட்டிருந்தாலும் அதன் வீரியத்தை சற்று குறைத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். மொத்தத்தில் ராகவா லாரன்ஸ் படம் என்றாலே 100% என்டெர்டைன்மென்ட் கேரண்டி என்பதால் இப்படத்தை குடும்பத்துடன் தியேட்டருக்கு சென்று ஒரு முறை பார்க்கலாம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -