1 Year of KGF 2 : கொடுக்கப்பட்ட வாக்கு நிறைவேற்றப்பட்டதா.. முன்றாம் பாகத்திற்கு ஹிண்ட் கொடுத்த கே.ஜி.எப் படக்குழு!
ஏழ்மையில் வாடி உயிரை விட்ட தாயின் ஆசையை நிறைவேற்ற ராஜா கிருஷ்ணப்ப பைரியாவாக இருந்த சிறுவன், ராக்கி பாயாக மாறுகிறார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appராக்கி மும்பையை தாண்டி, கே.ஜி.எஃப்பிற்குள் நுழைந்து முக்கிய தலைகளுள் ஒருவனான கருடனை கொன்று அங்கிருக்கும் மக்களின் மனதில் இடம் பிடிக்கிறார். இதுவே முதல் பாகத்தின் சுருக்கம்.
கடந்தாண்டில் வெளியான கே.ஜி.எஃப் 2, முதல் பாகத்தின் தொடர்ச்சி கதையை விவரித்தது. ஒரு பக்கம் அதிரா மற்றொரு பக்கம் ரமிக்கா சென் என அனைத்து இடங்களிலும் ராக்கிக்கு பகை உண்டாகிறது. பகையாளிகளை தொம்சம் செய்யும் ராக்கி இறுதியில் கடலில் தன்னை மாய்த்து கொள்கிறார்.
அவ்வளவுதான் ராக்கி பாய் கதை முடிந்துவிட்டது என சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு, “எல் டொராடோ சாப்டர் 3” என எதிர்பாராத ட்விஸ்டை கொடுத்த கே.ஜி.எப் 2 இன்றுடன் ஓராண்டு நிறைவு செய்துள்ளது.
தற்போது ஓராண்டை நிறைவு செய்த கே.ஜி.எப் 2வை கொண்டாடும் வகையில், புது வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ராக்கி 1978 முதல் 1981 வரை எங்கிருந்தார் என்ற புது கேள்வி எழுப்பட்டுள்ளது.
புதியதொரு சம்பவத்தை நீங்கள் காணப்போகிறீர்கள் என்ற வாசகம் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இது சலார் - கே.ஜி.எஃப் மல்டிவெர்ஸாக இருக்கும் என மக்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இறுதியில் கொடுக்கப்பட்ட வாக்கு நிறைவேற்றப்பட்டதா என்பதை 3ஆம் பாகம் பதிலளிக்கும் என படக்குழுவினர் ஹிண்ட் கொடுத்துள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -