Rajalakshmi Senthil : ‘கற்பனை கூட பண்ணி பார்த்ததில்லை..’ ஹீரோயினாக அவதாரம் எடுத்த சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி!
‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமானவர் ராஜலட்சுமி செந்தில். இவர் தமிழ் சினிமாவில் சின்ன மச்சான் பாடலின் மூலம் சினிமா பாடகியானார் .
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகணபதி பாலமுருகன் என்ற புதுமுக இயக்குநரின் லைசென்ஸ் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் ராதாரவி, N.ஜீவானந்தம், விஜய் பாரத், பழ.கருப்பையா, கீதா கைலாசம், அபி நட்சத்திரா, தன்யா அனன்யா, வையாபுரி, நமோ நாராயணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ராஜலட்சுமி பேசியதாவது, “சினிமாவில் எனக்கு முதல் மேடை. இந்த படத்தின் கதையை இயக்குநர் சொல்லிவிட்டு அதில் கதாநாயகியாக நான் நடிக்கிறேன் என்றபோது என்னால் நம்ப முடியவில்லை. அதிலும் துப்பாக்கி வைத்த ஒரு பெண்ணாக என்னை கற்பனை கூட பண்ணி பார்த்ததில்லை.”
இந்த படத்தில் ராஜலட்சுமிதான் நடிக்க வேண்டும் என்று இப்படத்தின் இயக்குநர் ஒற்றை காலில் நின்றாராம்.
மேலும் பேசிய அவர் “ராதா ரவி என்னிடம் பேசும்போதெல்லாம் உன் கணவனை அடுத்த நிகழ்ச்சிக்கு கூட்டிட்டு வரகூடாது என்று விளையாட்டாக கூறுவார். ஆனால் இன்று அது உண்மையாகிவிட்டது. இந்த மாதம் எங்களை போன்ற கலைஞர்களுக்கு ஒரு பொன்னான மாதம் அடுத்து அடுத்து நிகழ்ச்சிகள் வந்துகொண்டே இருக்கும். எனக்கு பதிலாக எனது கணவர் நிகழ்ச்சிகளில் பாடி வருகிறார்.” என்று கூறினார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -