Petta Rap Movie Audio Launch :பிரபுதேவா சன்னி லியோன் நடிக்கும் 'பேட்ட ராப்' இசை வெளியீட்டு விழா புகைபடங்கள்!
ப்ளூ ஹில் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜோபி பி சாம் தயாரிப்பில், இயக்குநர் எஸ்.ஜெ.சினு இயக்கத்தில்'பேட்ட ராப்'படம் உருவாகியுள்ளது. திரைப்படத்தின் இசை வெளியீடு விழா நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
செப்.27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் .இந்த திரைப்படத்தை சஃபையர் ஸ்டுடியோஸ் வெளியிடுகிறது
படத்தில் நடித்திருக்கும் நடிகை சன்னி லியோன்,பிரபு தேவாவுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.நிகழ்ச்சியில் அனைவரையும் கவரும்படி நீல நிற ஆடையில் சன்னி லியோன்
நடனப் புயல் பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.ஹீரோ மற்றும் ஹீரோயின் மேட்சாக நிகழ்ச்சிக்கு சிவப்பு நிற ஆடையில் வந்தனர்
படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் நடிகை வேதிகா,தமிழில் காளை,பரதேசி,முனி மற்றும் காஞ் சனா படங்களில் கிட் கொடுத்தவர்.சிவப்பு நிறத்தில் வைரம் போல் ஜொலிக்கிறது ஆடை
இந்த திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார்.காலா ரஜினிபோல் கோட்சூட் போட்டு நிகழ்ச்சியில் மாஸ் காட்டினார்