Sunainaa : ‘நான் சினிமா வர காரணமே ரஜினிதான்..’ மனம் விட்டு பேசிய நடிகை சுனைனா!
காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை சுனைனா.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமாசிலாமணி, வம்சம், நீர்பறவை, சில்லு கருப்பட்டி போன்ற ஹிட் படங்களில் நடித்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழி படங்களில் நடித்துவரும் இவர், டொமின் டி சில்வா இயக்கி உள்ள ரெஜினா படத்தில் நடித்துள்ளார்.
ரெஜினா பட நிகழ்ச்சியில் பேசியதாவது, ‘என்னுடைய குடும்பத்துடன் அமர்ந்து 2006 ஆம் ஆண்டு தொலைக்காட்சி பார்க்கின்ற ஒரு சின்ன பெண்ணாக இருந்தேன். அந்த சமயத்தில் நான் சினிமாவுக்கு வருவேன் என்று தீர்மானிக்கவில்லை.’
‘விடுமுறையில் ஹைதராபாத்தில் உள்ள என் உறவினர் வீட்டுக்கு செல்லும் போது நான் பார்த்த படம்தான் சந்திரமுகி. அந்த படத்தை பார்த்த பின்தான் நான் தென்னிந்தியா மொழி நடிகையாக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.தொடர்ந்து ரஜினி, சூரியா படங்களை பார்த்தேன். அதன் மூலம் சினிமா குறித்த ஆர்வம் எனக்குள் வந்தது .’- சுனைனா
மேலும் பேசிய அவர் ‘ வெங்கட் பிரபுவின் சரோஜா படத்திற்கு நான் பெரிய ரசிகை. மனதில் வருத்தம் எற்படும் சமயத்தில் நான் சரோஜா படத்தைதான் பார்த்து சிரிப்பேன்’என்று கூறினார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -