Adipurush : ‘திருப்பதியில்தான் என் கல்யாணம் நடக்கும்..’ ஆதி புருஷ் பிரோமோஷனில் இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபாஸ்!
ஓம் ரவுத் இயக்கத்தில் பிரபாஸ், கிருத்தி சனோன், சைஃப் அலி கான் நடிப்பில் உருவான ஆதி புருஷ் படத்தின் முதல் டீசர் வெளியாகி விஷுவல் எஃபெக்ட்ஸிற்காக கடும் விமர்சனத்தை பெற்றது.
அதன் பின் மேம்படுத்தப்பட்ட கிராபிக்ஸ் காட்சிகளை கொண்ட டீசர் வெளியிடப்பட்டது. பலரும் இதில் பெரிய மாற்றமில்லை என அவரவர்களின் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
சர்ச்சைகளை சந்தித்த ஆதி புருஷ் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஜூன் 16ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் ஆதி புருஷ் படத்திற்கு பிரோமோஷன் வேலைகள் மும்மரமாக நடந்து வருகிறது.
இந்தியாவில் புகழ்பெற்ற திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கும், ஆதிபுருஷ் படக்குழு சென்று இருந்தது.
திருப்பதியில் நடக்கும் பிரோமோஷன் விழாவில் குவிந்த பிரபாஸின் ரசிகர்கள் ஆரவாரத்துடன்கரகோஷங்களை எழுப்பினர். அப்போது, தனது கல்யாணம் திருப்பதியில்தான் நடைபெறும் என பிரபாஸ் கூறினார்.