Vijay Sethupathi : விஜய் சேதுபதியுடன் புது படம்..தன்னை தானே கிள்ளிப்பார்த்த கன்னட நடிகை!
சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.
தமிழ் நாட்டில் தவிர்க்க முடியாத நடிகர்களுள் ஒருவரான இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் , ஹிந்தி போன்ற பல மொழிகளில் நடித்து வருகிறார்.
உழைப்பால் உயர்ந்த மனிதன், தற்போது ஆறுமுக குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் ருக்மிணி வசந்த் என்ற புதுமுக நடிகை கதாநாயகியாக களமிறங்கியுள்ளார்.
விஜய் சேதுபதியை பற்றி ருக்மிணி வசந்த் பேசியதாவது, ‘இதுவரை மூன்று நாட்களுக்கு படப்பிடிப்பு நடந்துள்ளது. நான் விஜய் சேதுபதி பக்கத்தில் நின்று நடிக்கும்போதெல்லாம் நான்தான் நடிக்கிறன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அதனால் நான் என்னையே கிள்ளிப்பார்த்தேன். வசனங்களை எப்படி பேசவேண்டும் என்று விஜய்சேதுபதி எனக்கு சொல்லிக்கொடுப்பார்.’
ருக்மினி இதற்கு முன்னால் கன்னட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.