✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Parasakthi : பராசக்தி திரைப்பட உலகை அறிமுகப்படுத்தும் விழா ! 60கள் கெட் அப்பில் நடிகர்கள்

ராகேஷ் தாரா   |  19 Dec 2025 03:11 PM (IST)
1

Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் “பராசக்தி”.

Continues below advertisement
2

1960களின் வரலாற்றுப் பின்னணியில், ஒரு மாறுபட்ட களத்தில் தமிழின் பெருமை சொல்லும் படைப்பாக உருவாகியுள்ள இப்படம், வரும் 2026 பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

Continues below advertisement
3

வள்ளுவர் கோட்டத்தில் இப்படத்தில் 60களின் காலகட்டத்தைக் கொண்டு வர பயன்படுத்தப்பட்ட கார்கள், ரயில், ரயில் நிலைய செட் மற்றும் அந்தக்கால அத்தியாவசிய பொருட்களை வைத்து, பராசக்தி பட உலகை செட் மூலம் உயிர்ப்பித்துள்ளனர் படக்குழுவினர். பொதுமக்கள் பார்வையிடும் வகையில் பராசக்தி பட உலகம் ஒரு கண்காட்சியாக உருவாக்கப்பட்டுள்ளது.

4

இந்த நிகழ்வில் பேசிய படத்தின் இயக்குநர் சுதா கொங்காரா திரைப்படம் மூலம் நாம் ஒவ்வொரு வாழ்வியலில் போய் வாழலாம். அது எனக்கு மிகவும் பிடித்த விஷயம். இறுதிச்சுற்று படத்தில் ஒரு குத்துச்சண்டை உலகில் வாழ்ந்தது போல், பராசக்தி படத்தில் நம் வரலாற்றுக் காலத்தில் நுழைந்து பார்த்திருக்கிறோம். நம் உரிமைக்காக நாம் சண்டையிட வேண்டும் எனும் கருத்து என்னை மிகவும் பாதித்தது. வரலாற்று உலகைத் திரும்பக் கொண்டு வர ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்துள்ளோம்.' என்று கூறினார்

5

நிகழ்வில் பேசிய சிவகார்த்திகேயன் சுதா மேம் 1960 களில் நடப்பதாகக் கதை அமைத்திருந்தார். அவர் தான் இந்தப்படம் பண்ணக்காரணம். இந்தப்படத்திற்காக 4,5 வருடம் அவர் உழைத்திருந்தார். அவர் சொன்னதைச் செய்தால் போதும். இந்தப்படம் செய்வது எல்லோருக்குமே கஷ்டம் தான். அதை எல்லோரும் ஏற்றுக்கொண்டு உழைத்துள்ளார்கள்.பராசக்தி ஒரு முக்கியமான பிரச்சனையைப் பேசும் படம். காதல், பாசம், வீரம், புரட்சி என எல்லாத்தையும் பேசும் படமாக இருக்கும். இந்த பொங்கலுக்கு நல்ல கொண்டாட்டமாக இருக்கும் பார்த்து ரசியுங்கள் நன்றி. என்று கூறினார்

6

நடிகை ஶ்ரீலீலா பேசியதாவது எல்லோருக்கும் நன்றி. பராசக்தி எனக்கு மிக முக்கியமான படம். என் அறிமுகத் தமிழ்ப்படம். சுதா மேடமுக்கு நன்றி. இங்கிருக்கும் ஒவ்வொரு பொருளுக்குப்பின்னால் ஒரு பெரிய கதை இருக்கிறது, ஒரு அர்த்தம் இருக்கிறது. அது படம் பார்க்கும் போது உங்களுக்குப் புரியும். பராசக்தி உலகிற்குள் தரிசித்து கொண்டாடுங்கள் நன்றி.

7

நடிகர் ரவி மோகன் இந்தப்படம் மிகப்பிரம்மாண்ட படம். படத்திற்குள் நான் போகும் முன் எனக்குமே நிறையத் தயக்கம் இருந்தது. ஆனால் இந்த படத்திற்காக உழைப்பைப் போட்ட அனைவரையும் கண்டிப்பாக பாராட்ட வேண்டும். அவ்வளவு உழைத்துள்ளார்கள். என்னை அவ்வளவு அற்புதமாகப் பார்த்துக்கொண்டார்கள். என்னை நன்றாக பார்த்துக்கொண்ட சுதா மேடமுக்கு நன்றி. என்று கூறினார்

8

நடிகர் அதர்வா இந்த மாதிரி விழா எல்லா படத்திற்கும் எளிதாக நடக்காது. இது பிரம்மாண்டமான படம். ஜீவி பிரகாஷின் 100 வது படம், ரவிமோகன் சார் வில்லனாக நடிக்கும் படம், சிவகார்த்திகேயன் சாரின் 25 வது படம். ஶ்ரீலீலாவின் முதல் தமிழ்ப்படம். இப்படி எல்லோருக்கும் முக்கியமான படம். ஷீட்டிங் போன போது மிகவும் சந்தோசமாக இருந்தது. இவ்வளவு பெரிய படத்தை எடுத்துத் தயாரித்திருக்கும் ஆகாஷ் அவர்களுக்கு நன்றி. படம் எல்லோருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும் என்று கூறினார்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Parasakthi : பராசக்தி திரைப்பட உலகை அறிமுகப்படுத்தும் விழா ! 60கள் கெட் அப்பில் நடிகர்கள்
Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.