CM Photo story ; கலவரக் கும்பலை பொடனிலேயே அடிச்சு ’வெரட்டுவாய்ங்க' - மதுரை ஸ்லாங்கில் முதல்வர் !
மதுரையில் இன்று பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர், மேலமடை பாலத்தை திறந்து வைத்தார்.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண்; வீரமிக்க பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த மண்; முக்கியமாக, ஆராய்ந்திடாமல் அவசர அவசரமாக தவறான தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து, நீதி கேட்டு கண்ணகி முழங்கிய மண்! திருச்செந்தூர் முருகனின் வேலுக்காக தலைவர் கலைஞர் நீதி கேட்டு, நெடும்பயணம் தொடங்கிய மண், இந்த மதுரை மண்! - அரங்கில் பேசிய முதல்வர்.
மதுரைக்காரர்கள் என்றாலே, பாசக்காரர்களாக இருப்பார்கள்! அப்படிப்பட்ட உங்களையெல்லாம் சந்திக்கின்ற இந்த நேரத்தில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் - முதலமைச்சர்.
முத்திரை திட்டங்களிலேயே, அதிக பயனாளிகளைக் கொண்டது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்தான்! மதுரை மாவட்டத்தில் மட்டும் 4 இலட்சத்து 54 ஆயிரம் சகோதரிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிக் கொண்டு வருகிறோம்! - முதலமைச்சர் பேச்சு.
உங்கள் வீட்டில் காலேஜ் செல்கின்ற மாணவிகள் இருந்தால், அவர்கள் படிப்பை முடிக்கின்ற வரைக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதுதான் ’புதுமைப்பெண் திட்டம்’! மதுரை மாவட்டத்தில் மட்டும், 63 ஆயிரத்து 400 புதுமைப்பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிக் கொண்டு வருகிறோம்! - முதலமைச்சர் பேச்சு.
முதலமைச்சரை வரவேற்ற மதுரை மக்கள்.