Moon Bin: இளம் வயதில் உயிரிழந்த பிரபல பாடகர் ‘மூன் பின்’..ரசிகர்களின் கண்ணீர் பதிவால் நிரம்பிய ட்விட்டர்!
யுவஸ்ரீ | 20 Apr 2023 10:24 AM (IST)
1
தென் கொரிய இசைக்குழுவான ஆஸ்ட்ரோவின் முக்கியமான பாடகர், மூன் பின்.
2
நடிகராகவும் பாடகராகவும் மாடலாகவும் பன்முகத் திறமை கொண்ட இவர், நேற்று உயிரிழந்துள்ளார்.
3
பிரபலமான பல கொரியன் தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர் இவர்.
4
இந்தியாவிலும் இவருக்கு பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர்.
5
சியோல் நகரில் உள்ள மூன் பின், அவரது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
6
இவர், தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசாரின் தரப்பில் கூறப்படுகிறது.
7
மூன் பினின் இறப்பு, அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
8
கே-பாப் ரசிகர்கள் பலர் மூன் பின் புகைப்படத்தை வைத்து அவருக்கு நினைவஞ்சலி நடத்தி வருகின்றனர்.
9
இன்னும் பலர், இறந்த பாடகருக்கு கடிதம் எழுதி ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கண்ணீர் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.