HBD Sonam Kapoor : ‘அந்த கங்கை ஆற்றில் ஒரு வண்ண பறவை மூழ்கியதே நீரோடு..’ சோனம் கபூருக்கு இன்று பிறந்தநாள்!
ஹரிஹரன்.ச | 09 Jun 2023 01:44 PM (IST)
1
பாலிவுட்டின் முன்னணி நடிகரான அனில் கபூரின் மகள் சோனம் கபூர் இயக்குநராக ஆக வேண்டும் ஆசைப்பட்டார்.
2
சஞ்சய் லீலா பன்சாலியின் ப்ளாக் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார். அப்போது, நடிப்பின் மீதும் சோனமிற்கு ஆர்வம் வந்தது.
3
2007ல் சவாரிய படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின் டெல்லி 6 படத்தில் வரும் மசாக்கலி பாடலுக்கு சூப்பராக நடனம் ஆடி பலரின் கவனத்தை ஈர்த்தார்.
4
எப்போது கேட்டாலும் பழைய நினைவுகளை கண் முன் கொண்டு வரும் மசாக்கலி பாடல் இன்றும் பலரது ப்ளே லிஸ்டை ஆட்சி செய்து வருகிறது.
5
2013ல் தனுஷின் ஜோடியாக ராஞ்சனா படத்தில் நடித்தார். இதில் இடம்பெற்ற 'ஓ... கங்கையிலே ஒரு வண்ண பறவை மூழ்கியதே... நீரோடு’ பாடலும் செம ஹிட்டானது.
6
2018ல் தொழிலதிபர் ஆனந்த் அஹுஜாவை மணந்து கொண்டார். இந்த ஜோடிக்கு வாயு கபூர் அஹுஜா என்ற குழந்தை உள்ளது.