என்ன ஆச்சு? சூப்பர் ஹிட் சீரியலுக்கு குட் பை சொல்லும் கதாநாயகி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று இதயம். கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர், இதுவரையில் 650க்கும் அதிகமான எபிசோடுகளை கடந்துள்ளது.
அதுவும் 2 சீசன்களாக இதயம் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் பாரதி என்ற கதாபாத்திரத்தில் ஜனனி அசோக் குமார் நடித்து வருகிறார். மேலும், ரிச்சர்டு ஜோஸ், புவி அரசு, ரியா விஸ்வநாதன் ஆகியோர் உள்பட பலரும் நடித்து வருகின்றனர்.
இதற்கு முன்னதாக ஜனனி ஹிட் லிஸ்ட், வேற மாரி ஆபிஸ், ஆயுத எழுத்து, மாப்பிள்ளை ஆகிய சீரியல், வெப் சீரிஸ், படம் ஆகியவற்றில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தான் இதயம் சீரியல் மூலமாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வந்த ஜனனி இந்த சீரியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து ஜனனி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: பாரதியாக, இதயம் என்னை அழைத்துச் சென்ற பயணத்திற்கும் விடைபெற வேண்டிய நேரம் இது.
என்னுடைய இதயம் அன்பு, ஏக்கம், பலவிதமான உணர்ச்சிகளால் நிரம்பியிருக்கிறது. பாரதியாக என்னை ஏற்றுக்கொண்ட உங்கள் அனைவருக்கும் நன்றி. பாரதி கதாபாத்திரத்தில் நடிப்பது ஒரு முழுமையான பாக்கியம். இந்த தொடரின் நடிகர்கள், குழுவினர், தயாரிப்பு குழுவிற்கு நன்றி.
மக்களாகிய உங்களை மகிழ்விக்க எனக்கு கிடைத்த வாய்ப்பிற்கு நான் மிகவும் நன்றியுள்ளவராக இருக்கிறேன். அடுத்த சாகசத்திற்காக நான் உற்சாகமாக இருக்கிறேன். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கு நன்றி. விரைவில் அடுத்த ஸ்கிரீனில் உங்களை சந்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.