நீண்ட நாள் காத்திருப்பிற்கு பின்பு வெளியாகப்போகும் அயலான் டீசர்!
இன்று நேற்று நாளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இயக்குநர் ராம்குமார். இன்று நேற்று நாளை திரைப்படம் சயின்ஸ் பிக்சன் ஜானரில் வெளிவந்து விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றியை பெற்றது.இவர், அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து அயலான் என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார் என்ற அறிவிப்பு கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியானது.
இவரின் அடுத்த படைப்பான அயலான் திரைப்படம் ஏலியன்ஸை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட உள்ளதாக வெளியாகி இருந்தது. இதனையடுத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியது இந்த கூட்டணி.
நாள் போக்கில் அயலான் திரைப்படம் சூட்டிங் நின்று விட்டதா ? அயலான் என்ற திரைப்பட அறிவிப்பு வெளியானதா? சிவகார்த்திகேயனுக்கும் இயக்குநருக்கும் சண்டையா ??, இயக்குநர் ராமுக்கும் தயாரிப்பாளருக்கும் மோதலா ?? என பல கேள்விகள் இணையத்தில் வட்டமிட்டு கொண்டிருந்தது.
இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க, 2023 ஆம் ஆண்டின் தீபாவளியையொட்டி அயலான் திரைப்படம் வெளியாகும் என்று அறிவிப்பை வெளியிட்டது படக்குழு.இதற்கு மத்தியில் இயக்குநர் ராம், மேடை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பொழுது திரைப்படம் முழுக்க VFX பணிகள் இருப்பதால், அயலான் இத்தனை வருடங்கள் எடுத்துக் கொண்டது. திரைப்படத்தில் பாதிக்கு பாதிக்கு VFX நிறைந்து இருக்கும் .
இதனால், அயலான் திரைப்படம் 2024 பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அயலான் திரைப்படத்தின் பணிகள் முடிந்து வரும் நிலையில், படத்தின் டீசர் வரும் அக்டோபர் 6ஆம் தேதி வெளியாகும் என தகவல் பரவிவருகிறது.
சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், பானுப்பிரியா, இஷா கோபிகர் உள்ளிட்டோர் நடிக்க, ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.