Mari Selvaraj : மூன்றே படங்களை இயக்கி முக்கிய டைரக்டராக வலம் வரும் மாரி செல்வராஜ்!
எளிய மக்களின் கதைகளை தமிழ் சினிமா ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எளிய மக்களின் கொண்டாட்டங்களை படமாக்குவதில் சிக்கல் இருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வியலை படமாக்க எந்த தயாரிப்பு நிறுவனமும் முன்வராது அப்படி முன் வந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெறாது என்ற விமர்சனங்களை அடித்து நொறுக்கி பல கனவுகளோடு தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார் மாரி செல்வராஜ்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஆரம்ப காலகட்டத்தில் இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக 10 வருடங்கள் பணி புரிந்த மாரி செல்வராஜ் தனது முதல் கதையை இயக்குநர் பா ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது.வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.பல அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது.
அடுத்ததாக நடிகர் தனுஷை வைத்து இவர் இயக்கிய கர்ணன் திரைப்படம், எளிய மக்களுக்கும் அதிகாரத்தில் இருக்கும் காவல்துறைக்கும் இடையே நடக்கும் அதிகாரமீரலை அப்பட்டமாக திரைக்கு கொண்டு வந்தது. தனுஷுக்கும் பாராட்டுகள் குவிந்தது.
இதனை அடுத்து தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் என்ற படத்தை உருவாக்கினார். பல எதிர்மறையான கருத்துக்கள் வந்தபோதிலும், அதைப்பற்றி சிறிதும் வருத்தப்படாமல் தான் சினிமாவிற்கு வந்த நோக்கத்திற்காக கடுமையாக உழைத்து வருகிறார்.
சினிமாவின் முன்னணி இயக்குநர் என்று சொல்லாமல் மிக முக்கியமான இயக்குநர் என்று சொல்வதே இயக்குநர் மாரி செல்வராஜிற்கு பொருத்தமாக இருக்கும்.
ஐந்து வருடங்களில் மூன்று படங்களை எடுத்த மாரி செல்வராஜிற்கு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் இணையாவாசிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -