Ayalaan Teaser Review : சைன்ஸ் ஃபிக்சனில் சிவகார்த்திகேயன்..லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வந்த அயலான்!
நேற்று மாலை வெளியான அயலான் ட்ரெய்லரில், அறிவியலின் வளர்ச்சி, சுற்றுச்சூழல் சீர் கேடு ஆகியவற்றை பற்றி விவரித்து டைனோசர்கள் போன்ற மற்றொரு உயிரினத்தின் முட்டைகள் இருப்பதாக காண்பிக்கப்பட்டது. அங்குதான் ஏலியன் கான்செப்ட் வருகிறது.
பக்கம் பக்கமாக சைன்ஸ் பேசும் சுயநல வில்லன், சிவகார்த்திக்கேயனின் வாழ்க்கையில் எதிர்பாராத என்ட்ரி கொடுக்கும் வேற்று கிரக வாசியிடம் ஆதாயம் தேடுகிறான். சூழ்நிலை காரணமாக, வில்லனுக்கும் ஹீரோவுக்கும் நடக்கும் சண்டை, ஹீரோயின் ரகுல் ப்ரீத்தின் காதல் காட்சி, யோகி பாபுவின் எதார்த்தமான காமெடி, ஆடல் பாடல், சூப்பர் வி.எப்.எக்ஸுடன் ஏலியன் சைன்ஸ் ஃபிக்ஷன் கதையை கமர்ஷியல் பாணியில் கூற வந்திருக்கிறார் இன்று நேற்று நாளை இயக்குநர் ஆர்.ரவிகுமார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை, இதுவரை காணாத ஏலியன்களை நிஜ வாழ்க்கையில் கண்டது போன்ற உணவை கொடுக்கிறது.
சில ஆண்டுகாலமாக எடுக்கப்பட்ட இந்த படத்தில் பாதிக்கு பாதி வி.எஃப.எக்ஸ் வேலை இருக்கிறது என்பதை படக்குழு அறிவித்தது. இதனால் 2024 ஆம் ஆண்டின் பொங்கலுக்கு படம் ரிலீஸாகவுள்ளது. இருப்பினும் அயலான், லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வரும் என்ற நம்பிக்கையை இந்த டீசர் கொடுக்கிறது
image 5பொதுவாக ஹாலிவுட் படங்களில், குவாண்டம் பிசிக்ஸ், பேரலல் யுனிவர்ஸ், ப்ளாக் ஹோல் என புரியாத விஷயங்களை வைத்து படம் எடுப்பார்கள். அதை பார்க்கும் சில மக்கள், ஒன்றும் விளங்கவில்லை என்றாலும் எல்லாம் தெரிந்தது போல் காட்டிக்கொள்பார்கள்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை, சைன்ஸ் ஃபிக்ஷன் கதைகள் பெரிதாக ஆராயப்படவில்லை. இன்னும் அவை வளராத சிறுபிள்ளைகளாகவே இருக்கிறது. இது போன்ற படங்களை ஹாலிவுட் பாணியில் எடுத்தால், ஒரு சில மக்களிடமே அது போய் சேரும். ஆனால், நன்கு எழுதப்பட்ட சைன்ஸ் ஃபிக்ஷன் கதையில் கமர்ஷியல் எலிமெண்ட்களை உட்புகுத்தினால், படமும் நல்ல வரவேற்பு பெரும், பொருளாதார ரீதியாகவும் கோடிக்கணக்கான வசூல் கிட்டும். இதில் இருக்கும் சிக்கல் என்னவென்றால், இது போன்ற படங்களை உருவாக்க அளவு கடந்த நேரமும், பணமும் செலவாகும். முன்னதாக வந்த எந்திரன், 2.0 ஆகியவை இதே உத்திகளை பயன்படுத்தி வரலாறு காணாத வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.