Amaran Shooting Wrapped : படப்பிடிப்பு நிறைவு... ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்ட அமரன் படக்குழு!
அனுஷ் ச | 25 May 2024 03:31 PM (IST)
1
தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர்.
2
ரங்கூன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியும், சிவகார்த்திகேயனும் அமரன் என்ற படத்தின் மூலம் முதன் முறையாக இணைந்தனர்.
3
இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க, ஜி வி பிரகாஷ் குமார் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
4
மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சாய் பல்லவி, பூவன் அரோரா, ராகுல் போஸ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
5
கடந்த சில மாதங்களுக்கு முன்பே அமரன் படத்தின் டீஸர் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
6
அமரன் படப்பிடிப்பு மிக தீவிரமாக நடந்து வந்த நிலையில், படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைத்துள்ளது என படக்குழு வீடியோ பதிவிட்டு அறிவித்துள்ளது.