Remo Nostalgia : கடந்த காலத்திற்கு அழைத்துச் செல்லும் ரெமோ ஆல்பம்!
இன்று தமிழ் சினிமா உலகில் கொடி கட்டி பறக்கும் மாஸ் ஹீரோக்கள் எல்லாம் ஒரு காலத்தில், ஹீரோயினுடன் ரொமான்ஸ் செய்துதான் மக்களின் மனதில் இடம்பிடித்தனர்.
‘அவரு கிட்ஸை புடிச்சிட்டாரு’என்று விஜய் கூறியதற்கு பின் டீனேஜ் பெண்களின் கவனத்தையும் ஈர்க்க தொடங்கினார் சிவகார்த்திகேயன்.காமெடியில் ஸ்ட்ராங்கான இந்த கிங், அதனுடன் ரொமான்ஸையும் புகுத்தி, பல ராம்-காம் தமிழ் படங்களில் நடித்தார்.
அந்தவகையில், இதே நாளில் 7 வருடங்களுக்கு முன்பு, வந்த ரெமோ படத்தில் பெண் வேடம் போட்டு அசத்தினார். கீர்த்தி சுரேஷிற்கும் சிவாவிற்குமான கெமிஸ்ட்ரியும் பக்கவாக வொர்க்-அவுட் ஆகியது.
தமிழ் செல்வி, சிரிக்காதே, செஞ்சிட்டாலே, மீசை ப்யூட்டி, டாவுயா ஆகிய பாடல்களை கொண்ட இந்த படத்தின் ஆல்பம் செம ஹிட்டானது.
அந்தந்த சீசனில் வரும் பாடல்களை கேட்டு ரசிப்பது காலம் காலமாக நடந்து வருகிறது. ஆனால், ஒரு சில பாடல்களே எப்போது கேட்டாலும் ப்ரெஷ்ஷாக இருக்கும். இப்போது கூட ரெமோ பாடல்களை கேட்டால் 2016 ஆம் ஆண்டிற்கே டைம் மிஷின் இல்லாமல் டைம் ட்ராவல் செய்து விடலாம்.
ஜவான் படத்தில் ஹையோடா என்ற பாடல் இடம் பெற்று இருக்கும். இந்த பாடலில், 'உன்ன பாத்தா கண்ணு ஊறுதே…கட்டமாகுதே…புத்தி மாறியே சத்தம் போடுதே… ஓஓ… ஹோ…’ என்ற வரிகள் வரும். இந்த வரிகளுக்கு ரெமோ படத்தில் வரும் காட்சிகளை சின்க் செய்து இளைஞர்கள் இன்ஸ்டாவில் வைப் செய்து வருகின்றனர். சம்பந்தமில்லாத வேறு ஒரு பாடலிற்கு இப்படத்தின் காட்சிகள் மேட்ச் ஆகுவதே ரெமோ இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் செய்த மேஜிக்..!