SK Production : சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் அடுத்த படம் இதுதான்!
சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பளாராக பயணத்தை தொடங்கி தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்ற சிவகார்த்திகேயன் பிசியாக படங்களில் நடித்து வருகிறார்.
அதுபோக, சினிமாவில் சம்பாதித்த பணத்தை வைத்து, சிவகார்த்திகேயன் SK புரொடக்ஷன் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினர்.
முதன்முதலாக அருண்ராஜா காமராஜ் இயக்கிய கனா படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்தார்.
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா,வாழ், டாக்டர், டான் போன்ற படங்களை தயாரித்து வசூலை அள்ளினார்.
சிவகார்த்திகேயன் தற்போது கொட்டுக்காளி, குரங்கு பெடல் போன்ற கதைக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களை தயாரித்து வருகிறார். அதில் கொட்டுக்காளி படம் வெளிநாடுகளில் விருதுகளை குவித்து வருகிறது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் தயாரித்த குரங்கு பெடல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. கோடை விடுமுறையையொட்டி இப்படம் வெளியாகவுள்ளது.