Ramayanam Based Movies : ராமாயணத்தை மையமாக வைத்து வெளியான இந்திய படங்கள்!
மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் நடித்திருந்த படம் இராவணன். இராவணன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து இராமாயணத்தை வேறு பாணியில் படமாக்கினார் மணி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2011 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த படம் ஸ்ரீ ராம ராஜ்யம். இந்த படத்தில் பாலகிருஷ்ணா ராமராகவும், நயன்தாரா சீதாவாகவும் நடித்து இருந்தனர்.
எஸ் எஸ் ராஜமௌலி இயக்கிய RRR படத்தில் ராம் சரண் அல்லூரி சீதாராம ராஜு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில், பான் இந்திய இயக்குநர், ராம் சரணை ராமராகவே சித்தரித்து இருப்பார்.
2023 ஆம் ஆண்டில் பெரிய பொருட்செலவில் இராமாயணத்தை படமாக எடுத்திருந்தார் இயக்குநர் ஓம் பிரகாஷ் ராவத். இந்த படத்தில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைஃப் அலி கான், சீதையாக கிருத்தி சனோன் நடித்திருந்தனர்.
இராமாயணத்தில் வரும் ஆஞ்சநேயர் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு ஹனுமன் என்ற படம் இந்த ஆண்டின்தொடக்கத்தில் வெளிவந்தது. இப்படத்தில் அம்ரிதா, வரலட்சுமி சரத் குமார், வினய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
யஷ், சாய் பல்லவி, ரன்பிர் கபூர் உள்ளிட்டோரை வைத்து இராமாயணத்தை தழுவிய மற்றொரு படம் உருவாகவுள்ளதாக தகவல் பரவி வருகிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -