HBD KJ Yesudas : இசைப்பயணத்தில் 8 தேசிய விருதுகளை வென்ற மாய குரலோன் கே.ஜே.யேசுதாஸ்!
வசீகர குரலால் இந்த உலகையே தன் வசமாக்கிய கான கந்தர்வன் கே.ஜே. யேசுதாஸ் பிறந்தநாள் இன்று. பக்தி பாடல்கள், கர்நாடக இசை, திரையிசை என இசை உலகில் ஒரு ஜாம்பவானாக திகழும் இந்த இசைக் கலைஞருக்கு பத்மஸ்ரீ, பத்ம பூஷண் , பத்ம விபூஷண் என பல கௌரவங்களை வழங்கி பெருமைப்படுத்தப்பட்டார். தனது 60 ஆண்டுகால இசைப்பயணத்தில் 8 தேசிய விருதுகளை பெற்றுள்ளார். அவை எந்தெந்த பாடலுக்காக என்பதை பார்க்கலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App1972ம் ஆண்டு 'அச்சனும் பாப்பாயும்' என்ற மலையாள படத்தில் இடம்பெற்ற மனுஷ்யன் மாதங்களே... பாடல்
1973ம் ஆண்டு 'காயத்திரி' என்ற மலையாள படத்தில் இடம்பெற்ற பத்மதீர்த்தமே உணரு... பாடல்
1976ம் ஆண்டு 'சிச்சோர்' என்ற இந்தி திரைப்படத்தில் இடம்பெற்ற கோரி தேரா காவ்ன் படா பியாரா... பாடல்
1982ம் ஆண்டு 'மேகசந்தேசம்' என்ற தெலுங்கு திரைப்படத்தில் இடம்பெற்ற ஆகாச தேசான ஆஷாட மாசானா... பாடல்
1987ம் ஆண்டு 'உண்ணிகளே ஒரு கதை பறையம்' என்ற மலையாள திரைப்படத்தில் இடம்பெற்ற உன்னிகளே ஒரு கதை பறையம்... பாடல்
1991ம் ஆண்டு 'பாரதம்' என்ற மலையாள படத்தில் இடம்பெற்ற ராமகத கானலயம்... பாடல்
1993ம் ஆண்டு 'சோபானம்' என்ற மலையாள படத்தில் இடம்பெற்ற க்ஷீரசாகர ஷயனா... பாடல்
2017ம் ஆண்டு 'விஸ்வாபூர்வம் மன்சூர்' என்ற மலையாள படத்தில் இடம்பெற்ற பொய்மரஞ்சா காலம்... பாடல்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -