Aishwarya Rajesh Birthday : “ஆண்டிப்பட்டி கனவா காத்து ஆள் தூக்குதே…” ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இன்று பிறந்தநாள்!
பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் “அசத்த போவது யாரு”என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக, தனது வாழ்க்கையை தொடங்கினார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதன் பின் “மானாட மயிலாட” நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பங்குபெற்று வெற்றி பெற்றார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇதனை தொடர்ந்து, 2010ல் இருந்து ஐஸ்வர்யா படங்களில் நடிக்க ஆரம்பித்தார். விஜய் சேதுபதியுடன் “ரம்மி” படத்தில் நடித்து பிரபலமானார்.
2015ல் வெளியான “காக்கா முட்டை” படம், இவரது சினிமா வாழ்வில் பெரும் மைல் கல்லாக அமைந்தது.
முன்னணி நாயகர்களுடன் நடிப்பதுடன், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார்.
கருப்பர் நகரம், மோகன் தாஸ், தீயவர் குலைகள் நடுங்க போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ளும் ஐஸ்வர்யா ராஜேஷ் இன்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -