Siddharth - Aditi Rao : சித்தார்த் - அதிதி தெலங்கானா கோயிலில் திருமணம் - வைரலாகும் தகவல்!
'காற்று வெளியிடை' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதாரி.
தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சித்தார்த்.
இவர்கள் இருவரும் 2021ம் ஆண்டு வெளியான 'மகா சமுத்திரம்' என்ற தெலுங்கு திரைப்படத்தில் இணைந்து நடித்தனர்.
அந்த சமயத்தில் அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு காதலாக மாறி இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின.
சோசியல் மீடியாவில் இருவரும் இணைந்து ரீல்ஸ் போடுவது, ஒருவரை ஒருவர் டேக் செய்து புகைப்படங்களை பகிர்வது, பார்ட்னர் என அழைப்பது என பல போஸ்ட் பகிர்ந்து வந்தனர்.
இந்நிலையில் சித்தார்த் - அதிதி இருவரும் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாயக ஸ்வாமி திருக்கோயிலில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அவர்களின் திருமணம் குறித்த எந்த ஒரு புகைப்படமும் வெளியாகாத நிலையில் இருவரும் விரைவில் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.