செய்தியாளர் சந்திப்பில் நடைப்பெற்ற களேபரம்..சித்தார்த்துக்கு குரல் கொடுத்த திரை பிரபலங்கள்!
அருண்குமார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவான சித்தா திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகி இருக்கிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇதையொட்டி பிரமோஷனுக்காக பெங்களூரு சென்று இருந்த நடிகர் சித்தார்த் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார்.
திடீரென அரங்கத்தில் புகுந்த கன்னட ரக்ஷனா வேடிக்கே அமைப்பினர் சித்தார்த்தை மேடையை விட்டு கீழ் இறங்குமாறு அமலியில் ஈடுபட்டனர்.
இதனால் சிறிது நேரம் பதட்டம் நிலவியது. இதையடுத்து நடிகர் சித்தார்த் மேடையை விட்டு கீழ் இறங்கி அரங்கத்தை விட்டு வெளியே சென்றார். இதன் பின், கன்னட நடிகர் சிவராஜ் குமார், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட மூத்த நடிகர்கள் சித்தார்த்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அனைத்து மொழி படங்களையும் பார்க்கக்கூடியவர்கள் கன்னட மக்கள் என்றும், அம்மக்கள் சார்பாக தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் நடிகர் சிவராஜ் குமார் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவுக்கும் இடையே நீண்ட காலமாக நிலவி வரும் காவிரி விவகாரம், கடந்த சில நாட்களாகவே மீண்டும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டுக்கு கர்நாடகா அரசு காவிரி நீரைத் திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் முன்னதாக உத்தரவிட்ட நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது என சிவராஜ் குமார் தெரிவித்தார்.
“பல தசாப்தங்களாகப் பழமையான இந்தப் பிரச்சினையைத் தீர்க்கத் தவறிய அனைத்து அரசியல் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் கேள்வி கேட்பதற்குப் பதிலாக.. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காத பயனற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேள்வி கேட்பதற்குப் பதிலாக.. சாமானியர்களையும் கலைஞர்களையும் இப்படித் தொந்தரவு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு கன்னடராக அனைத்து கன்னட மக்களின் சார்பிலும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என பிரகாஷ் ராஜ் பதிவிட்டுள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -