HBD Shilpa Shetty : ‘முத்து முத்து மழை முத்தாடுதே..’ இடையழகி ஷில்பாவின் பிறந்தநாள் இன்று!
இங்கிலாந்தின் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக் பிரதரில் வெற்றி பெற்ற பின், ஷில்பா உலக அளவில் அங்கீகாரம் பெற்றார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஷில்பா ஷெட்டி 1993 ஆம் ஆண்டு ஷாருக்கான், கஜோல் நடித்த 'பாசிகர்' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
1996ல் பிரபுதேவாவின் மிஸ்டர்.ரோமியோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். விஜய்யின் குஷி படத்தில், ‘மாக்கரினா’பாடலுக்கு டான்ஸ் ஆடினார்.
பரதநாட்டிய கலையில் நன்கு தேர்ச்சி பெற்ற ஷில்பா, பல நடன நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கு பெற்றார். ஹிந்தி பிக்பாஸின் இரண்டாவது சீசனை தொகுத்து வழங்கினார்.
2009-ல் தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை மணந்து கொண்டார். இந்த ஜோடிக்கு விவான், சமீஷா என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.
என்றும் இளமையாக இருக்கும் ஷில்பா ஷெட்டியின் பிறந்தநாளையொட்டி பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -