SRK : கோடிக்கணக்கில் வசூல் செய்து ஹாட்ரிக் வெற்றி பெற்ற ஷாருக்கான்!
ABP NADU | 10 Jan 2024 04:50 PM (IST)
1
இந்திய சினிமா திரையுலகில் தவிர்க்க இயலாத சினிமா நட்சத்திரமாக இருக்கக்கூடியவர் ஷாருக்கான்.
2
இவர் நடிப்பில் டிசம்பர் 22 ஆம் தேதி வெளியான டன்கி, சட்டவிரோதமாக புலம்பெயரும் மக்களின் வாழ்க்கையை விவரித்தது.
3
டன்கி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
4
நடிகர் ஷாருக்கானின் நடிப்பில் இதற்கு முன்பு வெளியான பதான் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. பதான் திரைப்படம் வெளியாகி உலக அளவில் 1050 கோடி ரூபாயை வசூல் செய்தது.
5
அடுத்ததாக தமிழ் சினிமாவின் இளம் இயக்குநரான அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் உலக அளவில் சுமார் 1160 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்திருந்தது.
6
இப்போது ஹாட்ரிக் வெற்றியாக டன்கி திரைப்படம் உலக அளவில் 447 கோடியை வசூல் செய்துள்ளது.