January 10 released movies : இதே நாளில் வெளியாகி மாஸ் காட்டிய பொங்கல் ஸ்பெஷல் படங்கள்!
ஜனவரி மாதம் என்றுமே திரை ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமான மாதம்தான். காரணம் எக்கச்சக்கமான விடுமுறை, போட்டி போட்டு கொண்டு பொங்கல் ரிலீசாக வெளியாகும் ஸ்டார் நடிகர்களின் திரைப்படங்கள் என மாதம் முழுவதும் ஒரே குதூகலம் தான். அந்த வகையில் பொங்கல் ரிலீஸ் படங்களாக ஜனவரி 10ம் தேதி வெளியான ஒரு சில படங்கள் என்ன என்பது ஒரு குட்டி ரீ வைண்ட்.
1986 : எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த், சத்யராஜ், அம்பிகா நடிப்பில் இளையராஜாவின் இசையில் வெளியான திரைப்படம் 'மிஸ்டர் பாரத்'. 1978 ஆம் ஆண்டில் அமிதாப்பச்சன் நடிப்பில் ஹிந்தியில் வெளியான திரிசூல் படத்தின் தமிழ் ரீமேக் படம் 'மிஸ்டர் பாரத்'. இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது,
2003 : தரணி இயக்கத்தில் விக்ரம், ஜோதிகா, பறவை முனியம்மா உள்ளிட்டோரின் நடிப்பில் வித்யாசாகர் இசையில் வெளியான ஆக்ஷன் திரைப்படம் 'தூள்'. இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் பாடல்களும் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது.
2014 : ஆர்.டி. நேசன் இயக்கத்தில் விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் நடிப்பில் இமான் இசையில் வெளியான 'ஜில்லா' திரைப்படம் சுமாரான வெற்றியை பெற்றது.
2014 : சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் முதல்முறையாக கூட்டணி சேர்ந்த படம் 'வீரம்'. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் வெளியான இந்த மாஸான ஆக்ஷன் படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.
2019 : கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிம்ரன், சசிகுமார், திரிஷா நடிப்பில் வெளியான 'பேட்ட' திரைப்படம் ஒரு சூப்பர் ஹிட் படமாக வெற்றி பெற்றது. ராக் ஸ்டார் அனிருத்தின் இசை கலக்கலாக அமைந்து இருந்தது
2019 : அதே ஆண்டு சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடிப்பில், இமான் இசையில் வெளியான 'விஸ்வாசம்' படமும் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.