Lal Salaam : அடுத்த மாதத்திற்கு தள்ளிப்போகும் லால் சலாம் படம் .. புது ரிலீஸ் தேதி இதுதானாம்!
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் லால் சலாம் திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கக்கூடிய நடிகர் ரஜினிகாந்த், சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
இத்திரைப்படம் முழுக்க முழுக்க கிரிக்கெட்டை மையமாக வைத்து இயக்கப்பட்ட திரைப்படம். லால் சலாம் திரைப்படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
லால் சலாம் திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகும் என முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்தது.
ரிலீஸ் தேதி நெருங்கி கொண்டிருந்த போது, படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்பு நிறுவனம் மாற்றிக் கொண்டிருந்தது.
தற்போது லால் சலாம் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் புதிய ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
அடுத்த மாதம் பிப்ரவரி ஒன்பதாம் தேதி லால் சலாம் திரைப்படம் உலகமெங்கும் திரைக்கு வருகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.