Radhika preethi: சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் ஜொலிக்கவிருக்கும் `பூவே உனக்காக` நடிகை..சசிகுமாருக்கு ஜோடியாகும் ராதிகா ப்ரீத்தி!
சன் டிவியில் 2020 ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் 'பூவே உனக்காக'. இந்த சீரியலின் கதாநாயகியாக பூவரசி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் ராதிகா ப்ரீத்தி.
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த சீரியல் கடந்த ஆண்டு முடிவடைந்தது.
பூவரசி என்ற கதாபாத்திரத்தில் ரசிகர்களின் ஃபேவரட்டாக இருந்த ராதிகா ப்ரீத்தி சில காரணங்களால் சீரியலில் இருந்து விலகினார். சீரியலில் இருந்து விலகினாலும் இன்ஸ்டாகிராம் மூலம் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
ராதிகா ப்ரீத்திக்கு தற்போது வெள்ளித்திரையில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. நடிகர் சசிகுமார் ஜோடியாக ஒரு படத்தில் கமிட்டாகி உள்ளார் ராதிகா ப்ரீத்தி.
இந்த சந்தோஷமான செய்தியை அறிந்த அவரின் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
ஏற்கனவே சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக இருக்கும் ராதிகா ப்ரீத்தி நிச்சயம் வெள்ளித்திரையில் முத்திரை பதிப்பார் என்பது அவரது ரசிகர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.