செப்டம்பர் மாதத்தை குறிவைத்த இந்திய சினிமா.. இவ்வளவு படங்கள் ரிலீஸா?
விஜய் மட்டும் வெங்கட் பிரபு கூட்டணியில் சயின்டிபிக் ஆக்ஷன் படமாக உருவாகி வரும் படம் தி கோட். இந்த படம் செம்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் இயக்கி சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் அமரன். இந்த படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகலாம் என தகவல் பரவி வருகிறது.
ஜூனியர் என் டி ஆர் நடித்து வரும் தேவாரா: பாகம் 1 படத்தை கொரடலா சிவா இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியாகி எதிர்ப்பார்ப்பை தூண்டிய நிலையில், படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக உள்ளது என கூறப்படுகிறது.
வெங்கட் அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள படம் லக்கி பாஸ்கர். படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் படம் செம்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக போவதாக கூறப்படுகிறது.
சத்யராஜ், சிபிராஜ் இணைந்து நடித்து வரும் ஜாக்சன் துரை 2 படமும் செப்டம்பர் மாதம் வெளியாகலாம் என நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் பார்த்திபன் இயக்கியுள்ள டீன்ஸ் படம் செப்டம்பர் மாதம் வெளியாகலாம் என கூறப்படுகிறது.