Kitchen Tips:வெங்காயத்தை நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க என்ன வழி? இதோ டிப்ஸ்!
வெங்காயத்தை சேமிப்பதன் முதல் விதி, அவற்றை 12 முதல் 17 டிகிரி தட்பவெப்பத்தில் சுத்தமான, இருண்ட மற்றும் உலர்ந்த இடத்தில் வைக்க வேண்டும். வெங்காயத்தை நல்ல காற்றோட்டத்துடன் உலர்ந்த இடத்தில் சேமித்து வைப்பது புத்துணர்ச்சியுடன் இருக்க உதவும்.வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கை ஒருபோதும் ஒன்றாகச் சேமிக்க வேண்டாம், அது வெங்காயம் கெட்டுப்போவதை துரிதப்படுத்தும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவெங்காயம் கெட்டுப்போகாமல் இருக்க, காற்றோட்டம் அவசியம், எனவே அவற்றை ஒருபோதும் பிளாஸ்டிக் பையில் சேமிக்க வேண்டாம். அஅறை வெப்பநிலையில் திறந்த கூடையில், துளையிடப்பட்ட காகிதப் பையில் அல்லது காற்றோட்டம் உள்ள பாத்திரத்தில் வைக்கவும்.
வெங்காயத்தை ஃபிரிட்ஜில் வைப்பது அவசியமா? -இல்லை, குளிர் மற்றும் ஈரமான சூழல் அவை கெட்டுப்போக அல்லது பூஞ்சை தாக்கத்திற்கு வழிவகுக்கும். உலர்ந்த மற்றும் காற்றோட்டமான இடத்தில் வெங்காயத்தை சேமிப்பது நல்லது.
ச்சை வெங்காயத்தை அல்லது பாதியாக நறுக்கிய வெங்காயத்தை காற்று புகாத பாத்திரத்தில் அல்லது குளிர்சாதன பெட்டியில் பிளாஸ்டிக் பையில் சேமிக்க வேண்டும். இது 10 நாட்களுக்கும் மேல் அவை கெடாமல் பார்த்துக்கொள்ளும்.
வெங்காயத்தை தோல் உரித்து ஃப்ரீசரில் வைப்பது அவற்றை வெட்டும்போது கண் எரிச்சலைத் தவிர்க்கும். பச்சை வெங்காயத்தின்ஆயுளை அதிகரிக்க, அவற்றை ஃப்ரீஸ் வைக்கலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -