அம்மா சொன்ன வார்த்தையை நம்பி காத்திருக்கிறோம்; சத்யராஜ் மகள் திவ்யா உருக்கம்!
தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் வில்லனாக நடித்திருந்தாலும் அதன் பிறகு ஹீரோவாக பட்டைய கிளப்பியிருப்பார் சத்யராஜ். ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த் என்று மாஸ் ஹீரோக்களுக்கு வில்லனாகவும் நடித்துள்ளார். 'கடலோர கவிதைகள்' படம் தான் சத்யராஜுக்கு மக்கள் மத்தியில் ஹீரோ என்கிற அங்கீகாரத்தையும், பேரையும், புகழையும் பெற்று தந்தது.
ஹீரோ ஏஜ் லிமிட்டை தாண்டிய பின்னர், குணச்சித்திர நடிகராக மாறிய சத்யராஜ் எந்த ரோல் கொடுத்தாலும் அதில் கச்சிதமாக நடித்து ரசிகர்களிடம் பாராட்டை பெறுகிறார். உதாரணமாக பாகுபலி படத்தில் வரும் கட்டப்பாவாக இருந்தாலும் சரி, லவ் டுடே படத்தில் வரும் வேணு சாஸ்திரி ஐயங்காராக இருந்தாலும் சரி ஒரே பாராட்டு மழை தான்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் வீட்டில் அவர் ஒரு மனைவிக்கு கணவர், மகள் மற்றும் மகனுக்கு அப்பா, பேரன் பேத்திக்கு தாத்தா தானே.
கடந்த 1979 ஆம் ஆண்டு சத்யராஜ், தன்னுடைய அக்கா மகள் மகேஸ்வரியை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சத்யராஜிற்கு சிபிராஜ் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் இருக்கின்றனர். சிபிராஜ் சினிமா பக்கமும், திவ்யா ஊட்டச்சத்து நிபுணராக கலக்கி வருகின்றனர். திவ்யா மகிழ்மதி என்ற இயக்கத்தின் மூலமாக தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ஊட்டச்சத்து குறைபாடு உள்ள மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.
சமீபத்தில் திவ்யா தன்னுடைய அம்மாவை பற்றி ஒரு உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அதன்படி திவ்யாவின் அம்மா மகேஸ்வரி கடந்த 4 வருடங்களாக கோமாவில் இருப்பதாக கூறியிருந்தார். இதைப் பற்றி சத்யராஜ் ஒருமுறை கூட வெளியில் கூறியது இல்லை. ஆனால், அப்பாதான் எங்களை இவ்வளவு தூரம் வளர்த்து இருக்கிறார் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் இப்போது என்னுடைய அம்மா கிடைத்தால் போதும் என்று பதிவை போட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: கோமாவில் இருப்பவர்களுக்கு அவர்களுக்கு நினைவூட்டு வகையில் அவர்களுக்கு பிடித்தவர்களின் குரல்கள், அவருக்கு பிடித்த கலம்காரி சேலையின் வாசனை என்று எதையும் தவறாமல் கொடுத்துக்கிட்டே இருக்கிறோம். அம்மா கோமாவிலிருந்து திரும்ப வர இந்த உலகத்தில் எந்த மூலையிலிருந்தாவது இதுக்கு ட்ரீட்மெண்ட் இருக்குன்னு சொல்லிடமாட்டாங்களா என்று காத்துக் கொண்டிருக்கிறோம்.
எல்லாவற்றிற்கும் நேரமும், காலமும் இருக்கிறது, அவசரப்படாத என்று அம்மா சொல்லிக்கிட்டே இருப்பாங்க. அம்மா சொன்ன அந்த ஒரு விஷயத்தை மட்டுமே நம்பிக்கையாக வைத்து இப்போது காத்துக் கொண்டிருக்கிறோம். ஆயுள் முழுவதும் காத்திருக்கவும் தயாராக இருக்கிறோம். அம்மா திரும்ப கிடைத்தால் போது என்று கூறியுள்ளார்.