HBD Sarath Kumar: சரத் குமார் நடிப்பில் வெளிவந்த ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் மூவிஸ்!
1994 ஆம் ஆண்டு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த நாட்டாமை படத்தில் சண்முகம் மற்றும் பசுபதி என்ற இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
1997 ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த சூரியவம்சம் படத்தில் சக்திவேல் கவுண்டர் மற்றும் சின்ராசு என்று இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்.
1998 ஆம் ஆண்டு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த நட்புக்காக படத்தில் அப்பா மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அப்பாவாக வரும் சரத்குமார் விஜயகுமாரின் உயிர் நண்பனாக நடித்து இருப்பார்.
1998 ஆம் ஆண்டு ஈரோடு சௌந்தர் இயக்கத்தில் வெளிவந்த சிம்மராசி படத்தில் சின்னதுரை என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். இப்படத்தில் குஷ்பூ, ஆனந்தராஜ், மணிவண்ணன், மனோரமா, பொன்னம்பலம் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர்
2000 ஆம் ஆண்டு சூரியபிரகாஷ் இயக்கத்தில் வெளிவந்த மாயி படத்தில் மாயி என்கிற மாயாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இப்படத்தில் அணைத்து வசதியும் இருந்தாலும் மிகவும் எளிமையான தோற்றத்தில் நடித்து இருப்பார்.
2005 ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளிவந்த ஐயா படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அப்பா சரத்குமார் குமாருக்கு லட்சுமி ஜோடியாகவும், மகன் சரத் குமாருக்கு நயன்தாரா ஜோடியாகவும் நடித்து இருந்தார்.