Sandy Master : சாண்டி மாஸ்டரை சீரியல் கொலைகாரனாக மாற்றிய லோக்கி.. இன்னும் என்னலாம் காத்திருக்கோ!
மானாட மயிலாட போன்ற நடன நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற சாண்டி காலப்போக்கில் சாண்டி மாஸ்டரானார்.
பல படங்களுக்கு கொரியோ கிராப் செய்து வருவதுடன் கலை நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று வருகிறார்
முன்னதாக, விஜய்யின் 67வது படமான லியோவில் சாண்டி மாஸ்டர் நடிக்கவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
கடந்த வாரத்தில் சிக்ஸ் பேக் லுக்கில் இருக்கும் புகைப்படத்தை சாண்டி பதிவிட்டார்.“கீப் காம் அண்ட் வெயிட் ஃபார் லோக்கீஸ் மேஜிக்” என்ற கேப்ஷன் இடம்பெற்றதால், லியோ படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு மேலும் அதிகரித்தது.
நேற்று மாலை வெளியான லியோவின் ட்ரெய்லரில், சாண்டி மாஸ்டரின் லுக் மிகவும் வித்தியாசமாக இருந்தது. பித்து பிடித்து கொலை வெறியுடன் சுற்றும் சீரியல் கொலைகாரனின் முகத்தை சாண்டி மாஸ்டர் மூலம் காண்பித்துள்ளார் லோக்கி.
இயக்குநர் மற்றும் வசன கர்த்தாவான ரத்தன குமார், சாண்டி மாஸ்டருடன் செல்ஃபி எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு, “யாருக்கெல்லாம் இவரின் வில்லத்தனமான சிரிப்பு பிடித்துள்ளது.... வாழ்த்துக்கள் சாண்டி மாஸ்டர். இனிமேல் தாய்குலங்கள் உங்களுடன் செல்ஃபி எடுக்க மாட்டார்கள். ஆல் தி பெஸ்ட்.” என குறிப்பிட்டு இருந்தார்.