Samantha Shocking Post: நாக சைதன்யா - சோபிதா திருமணம்; சற்றுமுன் சமந்தா போட்டு அடி-தடி இன்ஸ்ட்டா ஸ்டோரி!
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தன்னுடைய கேரியரில் உச்சத்தில் இருக்கும் போதே, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாக கடந்த 2017-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇவர்களின் திருமணம் கோவாவில் மிக பிரமாண்டமாக நடந்தது. நாக சைதன்யா குடும்ப வழக்கப்படி இந்து முறைப்படியும், சமந்தா குடும்ப வழக்கப்படி கிருஸ்தவ முறைப்படியும் இந்த திருமணம் நடந்து முடிந்தது.
நான்கு வருடங்கள் மட்டுமே சமூகமாக சென்ற இவர்களின் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு சிறு கருத்து வேறுபாடு விவாகரத்தில் முடிந்தது. அதன்படி இருவருமே 2021-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக அறிவித்தனர்.
சமந்தா தன்னுடைய இரண்டாவது திருமணம் குறித்து யோசிக்கவில்லை என்றாலும் நாக சைதன்யா பாலிவுட் பட நடிகை சோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்ய துவங்கினார். இன்று டிசம்பர் 4-ஆம் தேதி இரவு 8 மணியளவில் இவர்களின் திருமணமும் நடந்து முடிந்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்களை நாக சைதன்யா சமூக வலைத்தளத்திலும் பகிர்ந்திருந்தார்.
நாக சைதன்யா - சோபிதா ஜோடியின் திருமண வாழ்க்கை சிறக்க பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை தங்களின் வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில், சமந்தா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் போட்டுள்ள அடிதடி போஸ்ட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தை இருவரும் வெஸ்டலிங் செய்ய , அந்த பெண் குழந்தை ஆண் குழந்தையிடம் போராடி தோற்று போகிறது.
அந்த பெண்ணை போல் என குறிப்பிட்டு, சமந்தா இந்த வீடீயோவை போஸ்ட் செய்துள்ளார். இந்த பதிவை சமந்தா நாக சைதன்யாவிடம் போராடி தோற்றத்தை குறிப்பிட்டு தான் போட்டுள்ளார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -